English
முற்றிலும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமனது
வங்கியை பற்றி
கிளை பட்டியல்
வைப்புநிதி & கடன்
வரைவு காசோலை
புதியவை
சேர்மன் செய்திகள்
தகவல் அறியும் உரிமை
செய்திகள் & டெண்டர்
தொடர்புகொள்ள

அனைத்து கிளைகளும் கணிணிமயமாக (CBS) ஆக்கப்பட்டுள்ளது

தேசிய மின்னணு பணபரிவர்த்தனை (NEFT) வசதி உள்ளது

வெஸ்டர்ன் யூனியன் மணி ட்ரான்ஸ்பர் வசதி உள்ளது
சிடிஎஸ்2010 கிளியரிங் (CTS 2010-Clearing) வசதி உள்ளது
 

பாண்டியன் கிராம பாங்க் உங்களை அன்புடன் வரவேற்கிறது !

  37 ஆண்டுகளாக வங்கி சேவையில் உங்களுக்காக    

பிராந்திய கிராம வங்கிகள் சட்டம் 1976-ன் படி உருவாக்கப்பட்டது.

1977 ம் ஆண்டு மார்ச் மாதம்9ஆம்நாள்சாத்துரை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர்   விருதுநகருக்கு 16.07.1993 அன்று மாற்றப்பட்டது.இதன் தலைமையலுவலகம்  31.10.2000 முதல் தனது சொந்த கட்டிடத்தில் செயல்படத்தொடங்கியது.

அதிகாரமளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.5 கோடி. ஒதுக்கப்பட்ட மற்றும் பெறப்பட்ட மூலதனம் ரூ. 1 கோடி. தில் மத்திய அரசு 50 சதவீதம், தமிழ்நாடு அரசு 15 சதவீதம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 35 சதவீதம் வைத்துள்ளது..

முதல் நிலை பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஸ்பான்ஸர் செய்து நிர்வகித்து வருகிறது.

விவசாயம் மற்றும் விவசாயமல்லாத துறைகளுக்கு கடன்கள் வழங்குவதும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கடன்கள் வழங்குவதும் இவ்வஙகியின் முதன்மை நோக்கங்களாகும்.

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் 246 கிளைகளுடன் இயங்கி வருகிறது.

இந்திய அரசு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5 வழியலகுகளையும் தொடர்ந்து 2வது ஆண்டாக நிறைவேற்றியுள்ளது.

     சாதனைகள்   31.03.2014 அன்றுள்ளபடி

வங்கி வர்த்தகம் ரூ.7089.93 கோடி.

பெறப்பட்டவைப்புநிதி ரூ.3179.97 கோடி.

 கடன்கள் நிலுவை ரூ. 3909.99 கோடி.

 நிகர இலாபம் ரூ. 101.50 கோடி

 கடன் வசூல் சதவீதம் 97 %

 முன்னுரிமை பெற்ற துறைகளுக்கு ரூ.4238.02 கோடி கடன்களாக வழங்கப்பட்டுள்ளது. (மொத்தம் வழங்கிய கடனில் 94.86%)

 

 2978 புதிய சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டு ரூ.38.17 கோடி  கடனாக வழங்கப்பட்டுள்ளது.

   1997-98 முதல் தொடர்ந்து இலாபத்தில் இயங்கிவரும் இவ்வங்கியின் நிகர சொந்த நிதியிருப்பு ரூ.389.38 கோடி.

குறிப்பிடத்தக்கவைகள்

இன்சூரன்ஸ் வணிகம்

எல்.ஐ.சி.ஆஃப் இந்தியா, மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியவற்றின் நிறுவன முகவராக செயல்படும் எங்கள் வங்கியில் அவற்றின் எல்லா வகையான திட்டங்களும் எல்லா கிளைகளிலும் கிடைக்கும்.

நுண் கடன்

தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி(NABARD) இடமிருந்து சிறந்த செயல்பாட்டுக்கான விருதினை பெற்ற வங்கி

சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் பற்றி பார்வையிட "மாதிரி நிறுவனமாக" தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி(NABARD) ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 
 
பாண்டியன்  கிராம பாங்க் - இந்தியாவின்  தலைச்சிறந்த  கிராம வங்கிகளில் ஒன்று
arch